Showing posts with label Tamil cinema. Show all posts
Showing posts with label Tamil cinema. Show all posts

Friday, March 15, 2013

பரதேசி - விமரிசனம்


அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருபகுதி மக்களின் வாழ்க்கையைச் சோகம் பிழியப்பிழியப் பதிவு செய்திருக்கிறார் பாலா. தமிழ் சினிமாவின் நிகரற்ற கலைஞன் அவர். வேறு யாருக்கும் இந்தக் கதையை இப்படி எடுக்க துணிவு வராது.

வழக்கமாக கிளைமாக்ஸில் பழிவாங்கும் படலம்தானே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், சிறுகதை மாதிரியான ஒரு முடிவு. (நான் இன்னும் எரியும் பனிக்காடு நாவல் படிக்கவில்லை)

இயக்குனர்(பாலா), ஹீரோ(அதர்வா), பாடலாசிரியர் (வைரமுத்து, ஒளிப்பதிவாளர் (செழியன்), கலை இயக்குநர் (அறிமுகம், பெயர் தெரியவில்லை) என பலருக்கும் தேசிய விருது அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புண்டு. இரண்டு கதாநாயகிகளுக்கும் இனி இப்படியொரு படம் வாய்க்கப்போவதில்லை. இந்தியா சார்பில் இந்தப் படம்தான் ஆஸ்கருக்கு அனுப்பப்படவேண்டும்.

மற்றும்....

இளையராஜா இல்லாத குறைதான் படம் முழுக்க. அவர் அறியாத தேயிலைத் தோட்டமும் தேயிலைத் தொழிலாளர்களின் துயரங்களும் இல்லை. வைரமுத்துவின் பலத்தால் பாடல்கள் பெரிய குறையாக இல்லையென்றாலும் பின்னணி இசையில், இது ராஜாவுக்கேற்ற படம்.

Paradesi - must watch.

Friday, March 08, 2013

மிச்ச மூணு பேர் யார்?

'இவரைக் காதலிக்கிறேன்னு வீட்ல சொன்னப்ப, 'டி.வி-லயே அவ்வளவு கோமாளித்தனம் பண்ற ஆளாச்சே’னு ரொம்ப யோசிச்சாங்க. அப்ப இவர் தெளிவா, சிவக்குமார் அங்கிளைச் சமாதானத் தூதுக்கு அனுப்பிச்சார். அங்கிள் வந்து ரெண்டு நிமிஷத்துல ரெண்டு வரிதான் பேசினார்... 'சினிமால நாலு நல்ல பசங்க இருக்காங்க. அவங்கள்ல ஜெகனும் ஒருத்தன்’! அங்கிள் இப்படிச் சொன்னதும் வீட்ல எல்லாரும் மறு பேச்சு பேசலை... நேரா டும் டும் டும்தான்!’ - ஆனந்த் விகடனில், நடிகர் ’நண்டு’ ஜெகனின் மனைவி.

மிச்ச மூணு பேர் - சிவகுமார், சூர்யா, கார்த்தி தானே? :-)

Thursday, February 21, 2013

போற்றிப்பாடடி!

’போற்றிப்பாடடி பெண்ணே...’ பாடலின் முதல் Interludeல்(என்றால் இடையிசை, இணையத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை) எவ்வளவு பெரிய விஷூவல் சாத்தியங்களை முன்வைத்திருக்கிறார் இளையராஜா. அமர்க்களம். அசாத்தியமான கற்பனை வளம்.

பரதனும் கமலும் இசையின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்திருந்தாலும் ராஜாவைத் தாண்டவே முடியவில்லை. முதல் Interlude-ல் விஷூவல்கள் ஓரளவு சொதப்பினாலும் ஒருவழியாக, இறுதியில் பானை செய்யும் விஷூவல்கள் இசையுடன் கைகோர்த்துவிடுகிறது. போற்றிப் பாடடி பெண்ணே என்று குறிப்பிடுவது ராஜாவின் மகத்தான இசையையும் சேர்த்துத்தான்.

தமிழ்க் கடல்

கடல் படத்தில் ஆச்சரியமளித்த ஒரு விஷயம் - படத்தின் டைட்டில் கார்ட்.

Gemini Films circuit, Madras Talkies, A Mani Ratnam film போன்ற தயாரிப்பு விவரங்களைத் தவிர வேறு எதிலுமே ஆங்கிலம் இல்லை. படத்தின் டைட்டில், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஆகிய அனைத்தும் தமிழில் மட்டுமே இருந்தன. சமீபகாலமாக, முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போன்றவை ஆங்கிலத்திலும் இருக்கும்படிதான் டைட்டில் கார்டை வடிவமைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை.

இங்கு அப்படியெல்லாம் தரம் பிரிக்கவில்லை. எங்கும் எதிலும் தமிழ். ரஹ்மான், மணிரத்னத்தின் பெயர்கள்கூட தமிழில் மட்டுமே இருந்தன. மணி ரத்னத்துக்குத் தமிழ்ப் பற்று இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.