அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருபகுதி மக்களின் வாழ்க்கையைச் சோகம் பிழியப்பிழியப் பதிவு செய்திருக்கிறார் பாலா. தமிழ் சினிமாவின் நிகரற்ற கலைஞன் அவர். வேறு யாருக்கும் இந்தக் கதையை இப்படி எடுக்க துணிவு வராது.
வழக்கமாக கிளைமாக்ஸில் பழிவாங்கும் படலம்தானே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், சிறுகதை மாதிரியான ஒரு முடிவு. (நான் இன்னும் எரியும் பனிக்காடு நாவல் படிக்கவில்லை)
இயக்குனர்(பாலா), ஹீரோ(அதர்வா), பாடலாசிரியர் (வைரமுத்து, ஒளிப்பதிவாளர் (செழியன்), கலை இயக்குநர் (அறிமுகம், பெயர் தெரியவில்லை) என பலருக்கும் தேசிய விருது அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புண்டு. இரண்டு கதாநாயகிகளுக்கும் இனி இப்படியொரு படம் வாய்க்கப்போவதில்லை. இந்தியா சார்பில் இந்தப் படம்தான் ஆஸ்கருக்கு அனுப்பப்படவேண்டும்.
மற்றும்....
இளையராஜா இல்லாத குறைதான் படம் முழுக்க. அவர் அறியாத தேயிலைத் தோட்டமும் தேயிலைத் தொழிலாளர்களின் துயரங்களும் இல்லை. வைரமுத்துவின் பலத்தால் பாடல்கள் பெரிய குறையாக இல்லையென்றாலும் பின்னணி இசையில், இது ராஜாவுக்கேற்ற படம்.
Paradesi - must watch.