Wednesday, January 11, 2012

இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது?


எழுதுகிறமாதிரிக் கஷ்டம் வேறு ஒண்ணுமில்லை. எல்லோருக்கும் அவர் அவர் தொழில் செய்கிறபோது சந்தோஷம் வேண்டாமா? நாட்டியக்காரியைப் பாருங்க. எவ்வளவு ஆனந்தமாய் ஆடுகிறாள். பாடுகிறவன் கூட சந்தோஷமாய் பாடுகிறான். இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது? எனக்கு மட்டுந்தான் இப்படியா எல்லோருக்குமாண்ணு தெரியலையே!

- கி. ராஜநாராயணன் (தமிழ்நாட்டுக் கிராமியக் கதைகள் தொகுப்பில்).

Tuesday, January 10, 2012

காவல் கோட்டம் - கொலைவெறி ஹிட்!2012 சென்னை புத்தகக் காட்சியின் ராக்ஸ்டார், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்தான்.

சென்ற வருடம், சாகித்ய அகாடமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, 2011 புத்தகக்காட்சியில் 3000 காப்பிகள் விற்றதாகச் சொல்லப்பட்டது. (ஆனால், தினத்தந்தி, தினமணியின் டாப் 5-யில் இதற்கு இடம் கிடைக்கவில்லை). இந்த வருட வசூல் மழை, காவல் கோட்டத்துக்கு.

சாகித்ய அகாடமி விருது, சென்னை புத்தகக்காட்சி போன்றவற்றுக்கு முன்பே காவல் கோட்டம், 3000 காப்பிகள் விற்றுத்தீர்ந்துவிட்டது. எனவே, விருது ஆரவாரத்துக்கு முன்பே புத்தகம் ஹிட்டுதான்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் ஒரே அமளிதுமளிதான். உடனேயே, மதுரையிலிருந்து 1500 ஆர்டர்கள் குவிந்திருக்கின்றன. புத்தகக்காட்சியில் கேட்கவே வேண்டாம். காவல் கோட்டத்தைக் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. நம்பமுடியாத அளவுக்கு, தினமும் 300 லிருந்து 400 காப்பிகள் வரை விற்றுக்கொண்டிருக்கிறது. புத்தகத்தின் விலை, ரூ. 650 என்பதை மறந்துவிடவேண்டாம். இதே ரீதியில் சென்றால், இந்த வருடம் 10,000 காப்பிகள் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த வருட புத்தகக்காட்சியில், பலத்தப் போட்டி, பொன்னியின் செல்வனுக்கும் காவல் கோட்டத்துக்கும்தான்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/search.php?mode=search&page=1&keep_https=yes

2012 புத்தகக்காட்சி - கிழக்கின் டாப் 10

2012 புத்தகக்காட்சியின் கிழக்கு ஸ்டால்களில், நான் பார்த்தவரையில் கீழ்க்கண்ட புத்தகங்கள் அதிகம் விற்கின்றன.

1. அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் - ஜெயமோகன் - விலை ரூ 20.இணையத்தில் அதிகம் விவாதத்துக்குள்ளான கட்டுரைகள், இப்போது புத்தகவடிவில். புத்தகக்காட்சியில், 20 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-688-9.html

2. ராஜராஜ சோழன் - ச.ந. கண்ணன் - விலை ரூ. 90.சென்ற புத்தகக்காட்சியில், அதிகம் விற்ற 5 புத்தகங்களில் ஒன்று எனக் குறிப்பிடப்பட்ட ராஜராஜ சோழன், 2012 புத்தகக்காட்சியிலும் சூப்பர்ஹிட்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html

3. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் - அரவிந்தன் நீலகண்டன்
தலைப்பே இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைச் சொல்லிவிடுகிறது. 2012 புத்தகக்காட்சியிலிருந்து ஸ்டார் எழுத்தாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றிருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.


4. எக்ஸைல் - சாரு நிவேதிதா - விலை ரூ 250.கடந்த ஒரு மாதத்தில், அதிகம் பேசப்பட்ட புத்தகம், எக்ஸைல். இதன் அமோக விற்பனை பற்றி பத்ரி எழுதியிருக்கிறார். புத்தகக்காட்சியிலும் ஹிட்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/Charu-Nivedita.html


5. பொன்னியின் செல்வன் ( 5 பாகங்கள்) - கல்கி - விலை ரூ 899.


எப்போதும், புத்தகக்காட்சியின் முதன்மையான ஹீரோ, பொன்னியின் செல்வன்தான். இம்முறை, இன்னும் விசேஷமாக, கிழக்கும் விகடனும் பொன்னியின் செல்வனை வெளியிட்டுள்ளன.

கிழக்கில், பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும் சேர்த்து மொத்தமாக வாங்கினால் ரூ. 899. தனித்தனியாகவும் வேண்டிய பாகங்களை வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கிச் சேர்த்தால், மொத்தம் ரூ. 1,100/.


6. வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன் - விலை ரூ 125.தமிழ்பேப்பர் புகழ் வில்லாதி வில்லன், வெளிவந்த நாள் முதல் சுடச்சுட விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

7. காஷ்மீர் - பா. ராகவன் - விலை ரூ. 140.பாராவின் சென்ற வருட சூப்பர்ஹிட் நூல், இந்தப் புத்தகக்காட்சியிலும் தொடர்ந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறது.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html


8. தாயார் சன்னதி - சுகா - விலை ரூ. 180
இது, கிழக்கு வெளியீடல்ல. கிழக்கு விநியோகிக்கும் சொல்வனம் பதிப்பகத்தின் புத்தகம். கிழக்கு ஸ்டால்களில், இந்தப் புத்தகத்தை அள்ளிக்கொண்டு போகிறார்கள்.

மூங்கில் மூச்சுக்குப் பிறகு சுகாவுக்கு ஏராளமான வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுகாவின் மூங்கில் மூச்சு, தாயார் சன்னதி இரண்டுமே இப்புத்தகக்காட்சியின் பெஸ்ட் செல்லர்கள்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

9. 1 & 2 உலகப்போர்கள் - மருதன் - விலை ரூ 170 & 185

முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் ஆகிய மருதனின் இரு புத்தகங்களும் சென்ற புத்தகக்காட்சியில் சக்கைப்போடு போட்டது. இந்தத் தடவையும் அதிக வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முதல் உலகப்போர் - https://www.nhm.in/shop/978-81-8493-587-5.html
இரண்டாம் உலகப்போர் - https://www.nhm.in/shop/978-81-8493-141-9.html

10. உடையும் இந்தியா? - ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் - விலை. ரூ 425.திராவிடர் கழகம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?’கூட்டத்தால் இப்புத்தகத்துக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது. அப்படியென்னதான் எழுதியிருக்கிறார்கள் என்கிற ஆர்வத்தை வாசகர்களிடையே தூண்டியிருக்கிறது திராவிடர் கழகம்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html