Sunday, March 24, 2013

சச்சினின் அடுத்த ஹோம் டெஸ்ட் எது?

இந்திய கிரிக்கெட் அணிக்கு....

* ஏப்ரல்-மேயில் ஐபில்
* ஜூனில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி
* ஜூலையில் மேற்கு இந்தியத் தீவில் முத்தரப்பு ஒருநாள் போட்டி (இந்தியா-மே.இ-இலங்கை)
* ஆகஸ்ட்டில் ஹாயாக இருந்துவிட்டு, செப்டெம்பரில் சாம்பியன் லீக் போட்டி.  (லீக் டி20 போட்டி)
* அக்டோபரில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வருகிறது. 7 ஒருநாள் ஆட்டங்கள்.
* நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்கா செல்கிறது. மூன்று டெஸ்டுகள். 7 ஒருநாள் ஆட்டங்கள்.  ஜனவரி வரை தெ. ஆ. டூர் தான்.

2014
===

* பிப்ரவரியில் நியூசிலாந்து செல்கிறது.  (நம்ம நேரம், இப்போலிருந்தே நியூஸி அணி செம ஃபார்மில் இருக்கு.) 3 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்கள். மார்ச் வரை அங்குதான்.
* ஏப்ரல் - மேயில் வழக்கம்போல ஐபிஎல்.
* ஜூனில் பங்களாதேஷ் டூர். 3 ஒருநாள் ஆட்டங்கள்
* ஜூலையில் இங்கிலாந்துக்குப் போகிறது. 5 டெஸ்டாம்! 5 ஒருநாள் ஆட்டங்கள். ஆகஸ்ட்வரை அங்குதான்.

* அக்டோபர் - மேற்கு இந்தியத் தீவு அணி இந்தியாவுக்கு வருகிறது. 3 டெஸ்டுகள். 5 ஒருநாள் ஆட்டங்கள். அதாவது இன்று கிளம்பிய ஆஸி அணிக்குப் பிறகு அடுத்த 2014 அக்டோபரில்தான் இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடக்கப்போகுது.

இப்போ புரியுதா, இன்னைக்கு ஏன் சச்சின் ரசிகர்களைப் பார்த்து அவ்வளவு குஷியா கையசைச்சாருனு!

Friday, March 15, 2013

பரதேசி - விமரிசனம்


அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருபகுதி மக்களின் வாழ்க்கையைச் சோகம் பிழியப்பிழியப் பதிவு செய்திருக்கிறார் பாலா. தமிழ் சினிமாவின் நிகரற்ற கலைஞன் அவர். வேறு யாருக்கும் இந்தக் கதையை இப்படி எடுக்க துணிவு வராது.

வழக்கமாக கிளைமாக்ஸில் பழிவாங்கும் படலம்தானே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், சிறுகதை மாதிரியான ஒரு முடிவு. (நான் இன்னும் எரியும் பனிக்காடு நாவல் படிக்கவில்லை)

இயக்குனர்(பாலா), ஹீரோ(அதர்வா), பாடலாசிரியர் (வைரமுத்து, ஒளிப்பதிவாளர் (செழியன்), கலை இயக்குநர் (அறிமுகம், பெயர் தெரியவில்லை) என பலருக்கும் தேசிய விருது அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புண்டு. இரண்டு கதாநாயகிகளுக்கும் இனி இப்படியொரு படம் வாய்க்கப்போவதில்லை. இந்தியா சார்பில் இந்தப் படம்தான் ஆஸ்கருக்கு அனுப்பப்படவேண்டும்.

மற்றும்....

இளையராஜா இல்லாத குறைதான் படம் முழுக்க. அவர் அறியாத தேயிலைத் தோட்டமும் தேயிலைத் தொழிலாளர்களின் துயரங்களும் இல்லை. வைரமுத்துவின் பலத்தால் பாடல்கள் பெரிய குறையாக இல்லையென்றாலும் பின்னணி இசையில், இது ராஜாவுக்கேற்ற படம்.

Paradesi - must watch.

Friday, March 08, 2013

மிச்ச மூணு பேர் யார்?

'இவரைக் காதலிக்கிறேன்னு வீட்ல சொன்னப்ப, 'டி.வி-லயே அவ்வளவு கோமாளித்தனம் பண்ற ஆளாச்சே’னு ரொம்ப யோசிச்சாங்க. அப்ப இவர் தெளிவா, சிவக்குமார் அங்கிளைச் சமாதானத் தூதுக்கு அனுப்பிச்சார். அங்கிள் வந்து ரெண்டு நிமிஷத்துல ரெண்டு வரிதான் பேசினார்... 'சினிமால நாலு நல்ல பசங்க இருக்காங்க. அவங்கள்ல ஜெகனும் ஒருத்தன்’! அங்கிள் இப்படிச் சொன்னதும் வீட்ல எல்லாரும் மறு பேச்சு பேசலை... நேரா டும் டும் டும்தான்!’ - ஆனந்த் விகடனில், நடிகர் ’நண்டு’ ஜெகனின் மனைவி.

மிச்ச மூணு பேர் - சிவகுமார், சூர்யா, கார்த்தி தானே? :-)

அருமையான கதை!


 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (http://en.wikipedia.org/wiki/Venkatarama_Ramalingam_Pillai) எழுதிய ’என் கதை’க்கு நிகரான ஒரு சுவாரசியமான சுயசரிதையை நான் படித்ததில்லை. Terrific! என்ன ஒரு வாழ்க்கை! அந்தக் காலத்து எழுத்தாளராக இருந்தாலும் உரைநடையில்தான் என்ன ஒரு நளினம்! நாவல் போல கடகடவென படித்துவிட முடியும். தமிழ் தெரிந்த அத்தனை பேரும் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

இந்நூலை வாங்க - https://www.nhm.in/shop/100-00-0000-175-7.html


அசோகமித்திரனின் சிறந்த 10 புத்தகங்களில் ’என் கதை’க்கும் ஓர் இடமுண்டு.