பத்திரிகைகளில், யாராவது ஒரு பிரபலம், ’என்
சொந்த ஊர் மயிலாடுதுறை (அல்லது மாயவரம், இரண்டும் ஒன்றும்தான்)’ என்று
சொல்வதை அடிக்கடி பார்க்கிறேன். வாரம், நான்கைந்து முறையாவது மயிலாடுதுறை
பற்றிக் கேட்கவோ படிக்கவோ நேர்கிறது. நான் ஒருமுறை மயிலாடுதுறைக்குச்
சென்றிருக்கிறேன். அமைதியான, சிறிய ஊர். எப்படி இந்த ஊரிலிருந்து மட்டும் இத்தனை
பிரபலங்கள் முளைக்கிறார்கள்?
Thursday, February 14, 2013
கவி
பாரதியின் பிறந்த நாளன்று, கவிக்கு (வயது 2)
'ஓடிவிளையாடு பாப்பா’ பாடலை அறிமுகப்படுத்தினேன். 'ஓய்ந்திருக்கலாகாது’
என்கிற வார்த்தையெல்லாம் அழகாகத் தடம்புரண்டாலும், பாப்பா...என்று ஒவ்வொரு
வரியும் முடிவது கவிக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷமாகச் சொல்லிப்
பழகினாள். அடுத்த டிசம்பர் 11க்குள், கவி, குறைந்தது 10 பாரதி
பாடல்களையாவது பாடப்பழகவேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
ஜிமெயில் பூட்டு
உங்கள் gmail-க்கு வலுவான பூட்டு போடவேண்டுமா?
உங்கள் gmail அக்கவுண்டும் gtalk அக்கவுண்டும் தனித்தனி ID என்றால் இந்த நடைமுறையைப் பின்பற்றவும். (ஒரே ஐடி தான் என்றால் வேண்டாம். பிறகு, gtalk-க்கின் பாஸ்வேர்ட் உங்கள் வசம் இருக்காது. அது கொடுக்கும் பாஸ்வேர்டைத்தான் நாம் பயன்படுத்த நேரிடும்.)
https://www.google.com/settings/security
இந்த லிங்கில் உள்ள 2-step verification-ஐ enable செய்யவும்.
இதன்படி, நீங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டரிலிருந்து (அல்லது கம்ப்யூட்டர்களிலிருந்து) gmail-ஐ இயக்கினால் பிரச்னை இல்லை. ஆனால், வேறு ஏதாவது கம்ப்யூட்டரிலிருந்து உங்கள் gmail லாகின் செய்யப்பட்டால் உடனே அது உள்ளே சென்றுவிட்டாது. லாகின் ஐடி, பாஸ்வேர்ட் சரியாக இருந்தாலுமே, வெரிவிகேஷன் கோட் நம்பரைக் கேட்கும். (அது நேராக உங்கள் தொலைப்பேசிக்கு வந்துவிடும்.) கோட் நம்பர் கொடுத்தால் மட்டுமே gmail உள்ளே செல்லமுடியும்.
இதனால், உங்கள் மெயிலை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்கிற பயமே இல்லாமல் இருக்கலாம். (போன் தொலைந்து போனாலோ, நம்பர் மாறினாலோ அதை ஜிமெயில் செட்டிங்க்ஸில் மாற்றிக்கொள்ளலாம்.)

ஜேபி!
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்குக்கு வெளியே நடந்த ஒரு
கூட்டத்தில், அருமையான பேச்சொன்றைக் கேட்டேன். ஜேபி என்கிற
கல்வியாலோசகர். முதலில் 100 பேராக இருந்த கூட்டத்தை, பேச்சுத் திறமையால்
500+ ஆக்கிவிட்டார்.
+1,+2 படிக்கும் மாணவர்கள் அனைவரும், ஒருமுறை ஜேபியிடம் ஆலோசனை கேட்பது நல்லது. கல்வி, வேலைவாய்ப்பு விவரங்கள் விரல் நுனியில்.
மிக அருமையாகத் தமிழ் பேசியவரின் தாய்மொழி, குஜராத்தி. அத்தனை பேரையும் கட்டிப்போடும் குரல் வளம்.
தான், தமிழ்நாட்டில் மிகவும் ஃபேமஸ் என்பதுபோலப் பேசினார். அவர் எங்கு சென்றாலும் நீங்க ஜேபிசார்தானே என்று அடையாளம் கண்டு பேசுகிறார்களாம். ஆனால், நான் அவரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை.
இமெயில் ஐடி, தொலைப்பேசி எண் எல்லாம் தருகிறேன் என்றார், மாணவர்களிடம். அவர் அறிவிப்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன்.
ஜேபியை இங்கே பிடிக்கலாம்.
https://www.facebook.com/jpgandhi
http://www.askjpgandhi.com/jpgandhi.html

டாப் 10-ல் ராஜராஜ சோழன்
கடந்த மூன்று வருடங்களாக, கிழக்கு டாப் 10-ல் ராஜராஜ சோழன் இடம் பிடித்துவருகிறது.
சென்னை புத்தகக் காட்சி 2013 - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்
http://www.badriseshadri.in/2013/01/blog-post_23.html
ராஜராஜ சோழன் நூலை வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html

அவள் பிரிவு
சாமிநாத சர்மா தன் மனைவியைப் பற்றி எழுதிய
கடிதங்களின் தொகுப்பு, அவள் பிரிவு என்கிற பெயரில் புத்தகமாக
வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக்
காட்சியின் வெளியே உள்ள பிளாட்பாரக் கடையொன்றில் வாங்கினேன். பத்து ரூபாய்.
சாமிநாத சர்மா, நாடுகள், தலைவர்களைப் பற்றியெல்லாம் விரிவாக நிறைய நூல்கள்
எழுதியிருக்கிறார். இந்நூல் அவருடைய மனைவியைப் பற்றியது. அவருடைய
சுயசரிதத்தின் ஒருபாகமாக இருக்கும் என்றெண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், இது வேறொரு திசைக்குக் கூட்டிச் சென்றுவிட்டது. பல இடங்களில்
துக்கத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி சாமிநாத சர்மாவின் மனைவிமீது பெரிய
அளவில் மரியாதையை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காலப் பெண்கள் எப்படியெல்லாம்
வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று, அவள் பிரிவு.
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், என் வாழ்வில் மறக்கவேமுடியாத ஒரு புத்தகத்தை வெறும் பத்து ரூபாய்க்கா நான் வாங்கியிருக்கவேண்டும் என்று மனசு உறுத்தியது.
இந்நூல் தொடர்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு.
http://www.sramakrishnan.com/?p=3232

எப்படி மனசு வந்தது ரஹ்மான்?
’அடியே...’ எங்கே நீ கூட்டிப்போற (கடல்)’ பாடலை
Sid Sriram-க்குக் கொடுக்க ரஹ்மானுக்கு எப்படி மனசு வந்தது? மணிரத்னம், Sid
Sriram வெர்ஷனை மறுத்தபிறகும்!?
அடியே.. ரஹ்மானுக்கு லட்டு மாதிரியான பாடலல்லவா!
சித் ஸ்ரீராம் பேட்டி: http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-a-r-rahman-on-kadal/20130124.htm#1
’அடியே...’ பாடல்: https://www.youtube.com/watch?v=pAltddaLLf0

Mani Ratnam - Ilayaraja - Rahman - Factu!
Factu.
Mani Ratnam with Ilayaraja (in tamil): 8 films. 6 hits. 2 flops.
Mani Ratnam with Rahman: 11 films, 3 hits, 8 flops (incl kadal).

மணி ரத்னத்தின் தமிழ்ப் பற்று
கடல் படத்தில் ஆச்சரியமளித்த ஒரு விஷயம் - படத்தின் டைட்டில் கார்ட்.
Gemini Films circuit, Madras Talkies, A Mani Ratnam film போன்ற தயாரிப்பு விவரங்களைத் தவிர வேறு எதிலுமே ஆங்கிலம் இல்லை. படத்தின் டைட்டில், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஆகிய அனைத்தும் தமிழில் மட்டுமே இருந்தன. சமீபகாலமாக, முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போன்றவை ஆங்கிலத்திலும் இருக்கும்படிதான் டைட்டில் கார்டை வடிவமைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை.
இங்கு அப்படியெல்லாம் தரம் பிரிக்கவில்லை. எங்கும் எதிலும் தமிழ். ரஹ்மான், மணிரத்னத்தின் பெயர்கள்கூட தமிழில் மட்டுமே இருந்தன. மணி ரத்னத்துக்குத் தமிழ்ப் பற்று இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.
ஃபேஸ்புக்கில் இதற்கான சில பதில்கள்:
Sudharsan Venkat: மணி ரத்னம் படத்தின் பாடல்களில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கிடையாது.
Mahesh Subramanian: முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை Anbe Aaryuiyre - SJ Surya Movie

Sunday, March 11, 2012
அடுத்தத் தலைவன்
(இந்த வார கல்கியில் நான் எழுதியுள்ள கட்டுரை இது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுபோல வெளிப்படையான ஒரு தேர்வுக்குழு இருந்தால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். பார்க்கலாம்.)

தோனியின் தலைமேல் கூர்மையான கத்தி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது தோனிக்கு இவர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், கோலியைத் துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தியன் மூலமாக இந்திய கிரிக்கெட் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
ஒருவருடம் பின்னே சென்று பார்த்தால், நடந்ததெல்லாம் நம்பமுடியாதவையாகவே இருக்கின்றன. உலகக்கோப்பையை வென்ற அடுத்தச் சில வாரங்களில் ஐபிஎல் கோப்பையையும் இரண்டாவதுமுறையாகக் கைப்பற்றியபோது தோனியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் உண்மையிலேயே மிரண்டுதான்போனது. தோனி, தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுகூட தலையைக் காப்பாற்றிக்கொண்டுவந்ததால் (டெஸ்ட் தொடரில் 1-1), அழிக்கமுடியாத சக்தியாக விளங்கினார். அடுத்ததாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தையும் சமாளித்துவிட்டால் தோனிக்கு நிகரான ஒரு கேப்டன் இனியில்லை என்கிற நிலை உருவானது. ஆனால், அந்த இடத்தில்தான் பெரிய திருப்பமும் சறுக்கல்களும் ஏற்பட்டன. பெரிய கனவோடு வந்த இந்திய அணியைக் குனியக் குனிய அடித்தது இங்கிலாந்து. டெஸ்ட், ஒருநாள் போட்டி இரண்டிலும் தோனியால் சிறு வெற்றியைக்கூட பெறமுடியவில்லை. முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், தோனியின் போறாத நேரம் போன்றவற்றால் தோல்வி என்றுகூட சமாதானம் சொல்லப்பட்டது. இதற்கடுத்து, ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மிகக் கவனமாக அணுகப்பட்டது. கூடுதலாக, ஒரு பயிற்சி ஆட்டம் நுழைக்கப்பட்டது. காயமடைந்த வீரர்களுக்குத் தேர்வுகள் எல்லாம் வைக்கப்பட்டன. ஆனால், மீண்டும் தோனியை சிறுஎறும்பாக எண்ணவைத்தது ஆஸ்திரேலியா. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் படுகேவலமாகத் தோல்வி கண்டது இந்தியா. தொடர்ந்து முக்கியமான 8 டெஸ்டுகளில் தோல்வி அடைந்தபோதும் தோனியால் இந்திய அணியில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் தொடரில் தோனி சிறப்பாக ஆடியபோதும் படுகுழியிலிருந்த அணியை அவரால் மீட்டெடுக்கமுடியவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் உபயோகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கோலிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி பல தீர்மானங்களை முன்வைக்கிறது.
கோலி, ஒரு பேட்ஸ்மேனாக, சச்சினின் சாதனைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியவராக இருக்கிறார். தனக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்துசென்றுவிட்டார். டிசம்பர் 2006ல், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி மேட்சின் இரண்டாம் நாளின் முடிவில் கோலி அவுட் ஆகாமல் இருந்தார். கடினமான சூழ்நிலையில் அணியை மீட்டெடுக்கவேண்டிய சூழ்நிலை அப்போது. அடுத்தநாள் அதிகாலையில், கோலியின் தந்தை இறந்துபோன தகவல் கிடைத்தது. அணியின் வீரர்கள் கோலிக்கு ஆறுதல் சொல்லவந்தபோது, கோலி சொன்னார், 'நான் ஆடப்போகிறேன்'. அணிவீரர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருமகனாக அவர் செய்யவேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கும். ஆனால், அணிக்காக மைதானத்தில் இறங்கி, 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்து, பிறகுதான் தந்தைக்கான இறுதிக்கடமைகளை முடிக்கச் சென்றார். இந்தத் தீவிரத்தன்மைதான் கோலியை இந்திய அணியின் அடுத்தத் தலைவனாக உயர்த்தியிருக்கிறது.
ஆசிய கோப்பைக்கு தோனிதான் கேப்டன். சச்சினும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஷேவாக்குக்கு ஓய்வு மட்டுமே, நீக்கமல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் ஒருவருக்குக்கூட பெரிய பாதிப்பில்லை (காரணம் - ஐபிஎல்). அடுத்ததாக, இலங்கைச் சுற்றுப்பயணம் இருக்கிறது. 2013வரை அமிலச்சோதனை எதுவும் கிடையாது. அந்தவருடம்தான் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. இந்த நிலையில் தோனியையும் கோலியையும் வாரியம் எப்படி கையாளப்போகிறது?
டெஸ்டில் இனியும் தோனிக்கு இடமில்லை என்று வாரியம் முடிவெடுக்கவேண்டும். பேட்டிங்கும் மோசம், கீப்பிங்கும் சுமார் என்பதால் டெஸ்ட் மேட்சுகளுக்கு தோனி தேவையா என்கிற கேள்வி எழுகிறது. தோனியை விடவும் சஹா கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கீப்பிங்கும் நன்றாகவே செய்கிறார். இந்த நிலையில் தோனிக்காக ஓர் இளைஞனின் எதிர்காலத்தை வீணாக்கலாமா? தோனிக்குப் பதிலாக (குறுகிய காலத்துக்கு) ஷேவாக் அல்லது கம்பீர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவேண்டும். அதுவரை, கோலியை தயார்படுத்தவேண்டும் (எப்படி கும்பிளே தலைமையில் தோனியைத் தயார் செய்தார்களோ, அதுபோல). ஒருவருடம் கழித்து, கோலி, டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கவேண்டும். (ஏற்கெனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்குத் தலைமை தாங்கி உலகக்கோப்பையை வாங்கியிருக்கிறார் கோலி. மேலும், ஐபிஎல், ரஞ்சி அணிகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.) 2015 உலகக்கோப்பைக்கு இப்போதிருந்தே இந்திய அணி தயாராவதுபோல், 2013 தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கும் ஒரு திட்டம் வேண்டும். ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுபோல வெளிப்படையாகவும் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்ட முடியும்.
தாம், வீணாக்கப்படுகிறோம் என்று கோலி எண்ணுவதற்கு முன்பே முறையான பதவிகள் வழங்கப்படவேண்டும். கோலிதான் இந்திய அணியின் நம்பிக்கையான எதிர்காலம்.
நன்றி: கல்கி.

Subscribe to:
Posts (Atom)