Friday, April 26, 2013
Monday, April 01, 2013
டி. ராஜா
ஆங்கில செய்தி சேனல்களில் இலங்கையின் போர்க்
குற்றத்தை முன்வைத்து ஆணித்தரமாகப் பேசுவதில் டி.ராஜா (CPI) முக்கியமானவராக
இருக்கிறார். பொதுவாக ஆங்கில சேனல்களில் தமிழகம் சார்பாகப் பேசுபவர்கள்,
தமிழ்நாட்டு நலனுக்கு எதிராகவும் பேசத் தெரியாமல் உளறுபவர்களாகவும்தான்
இருக்கிறார்கள். இவர்களில் டி.ராஜா, சொல்ல வந்த கருத்தை மிக வலிமையாகவும்
ஆங்கில செய்தியாளர்கள் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவும் பேசுகிறார்.
இவரைப் போன்றவர்கள் ஆங்கில சேனல்களில் பேசினால் மட்டுமே தமிழ்நாட்டின்
குரல் இந்தியா முழுக்க ஒலிக்கும்.
டி. ராஜாவின் வாதத் திறமைக்கு, ’Lanka politics: Why hold players hostage?’ என்ற நேற்றைய NDTV நிகழ்ச்சி ஓர் உதாரணம்.
http://www.ndtv.com/video/player/left-right-centre/lanka-politics-why-hold-players-hostage/269805

ஆணா, பெண்ணா?
2011ல் எழுதியது:
10ம் வகுப்புத் தேர்வில் பிரியங்காவும் விக்னேஷ்குமாரும் தமிழில் 100/100 எடுத்தார்கள். தமிழகக் கல்வி வரலாற்றில் இது ஓர் அரிய சாதனை. ஆனால், விகடன், குமுதம் ஆகிய இரு பத்திரிகைகளிலும் பிரியங்காவுக்குத்தான் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய புகைப்படத்துடன் பிரியங்காவின் நீளமான பேட்டி. கூடவே, பிரியங்காவின் தமிழாசிரியர் ஜீவாவின்(இவரும் பெண்) பேட்டியும் (புகைப்படத்துடன்).
ஆனால், இரு பத்திரிகைகளிலும் விக்னேஷ்குமாரின் பேட்டி சிறிய அளவில் பாக்ஸ் மேட்டராக மட்டுமே வெளிவந்துள்ளது (போட்டோ, பாஸ்போர்ட் சைஸ்). இரு பத்திரிகைகளும் இவருடைய தமிழாசிரியரை கண்டுகொள்ளவில்லை (ஒருவேளை அவரும் ஆணோ?).
+2 தேர்வில் ஒரே பள்ளியில் படித்த கோகுல கிருஷ்ணன், மாதேஸ்வரன், தினகரன் மற்றும் நவீன்சந்தர் ஆகிய நான்கு பேரும் தமிழில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தார்கள். இவர்களையும் எந்த முன்னணிப் பத்திரிகையும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. சினிமா செய்திகளில் கடைபிடிக்கும் வழக்கத்தை சாதனையாளர்கள் குறித்த செய்திகளிலும் தொடர்வது விந்தையாக இருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)