Thursday, February 21, 2013

போற்றிப்பாடடி!

’போற்றிப்பாடடி பெண்ணே...’ பாடலின் முதல் Interludeல்(என்றால் இடையிசை, இணையத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை) எவ்வளவு பெரிய விஷூவல் சாத்தியங்களை முன்வைத்திருக்கிறார் இளையராஜா. அமர்க்களம். அசாத்தியமான கற்பனை வளம்.

பரதனும் கமலும் இசையின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்திருந்தாலும் ராஜாவைத் தாண்டவே முடியவில்லை. முதல் Interlude-ல் விஷூவல்கள் ஓரளவு சொதப்பினாலும் ஒருவழியாக, இறுதியில் பானை செய்யும் விஷூவல்கள் இசையுடன் கைகோர்த்துவிடுகிறது. போற்றிப் பாடடி பெண்ணே என்று குறிப்பிடுவது ராஜாவின் மகத்தான இசையையும் சேர்த்துத்தான்.

ஆறாம் திணை

ஆனந்த விகடனில் வெளிவரும் ’ஆறாம் திணை’ தொடர்
(கு. சிவராமன்), என் உணவுப் பழக்கத்தையே மாற்றிவிட்டது.
ஊரிலிருந்து நாட்டுச் சர்க்கரை, ராகி, கம்பு, வெள்ளைச் சோளம் ஆகியவை வந்திறங்கியிருக்கின்றன. சமையல் குறிப்புகளைத் தேடிப்பிடிக்கவேண்டும்.

தமிழ்க் கடல்

கடல் படத்தில் ஆச்சரியமளித்த ஒரு விஷயம் - படத்தின் டைட்டில் கார்ட்.

Gemini Films circuit, Madras Talkies, A Mani Ratnam film போன்ற தயாரிப்பு விவரங்களைத் தவிர வேறு எதிலுமே ஆங்கிலம் இல்லை. படத்தின் டைட்டில், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஆகிய அனைத்தும் தமிழில் மட்டுமே இருந்தன. சமீபகாலமாக, முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போன்றவை ஆங்கிலத்திலும் இருக்கும்படிதான் டைட்டில் கார்டை வடிவமைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை.

இங்கு அப்படியெல்லாம் தரம் பிரிக்கவில்லை. எங்கும் எதிலும் தமிழ். ரஹ்மான், மணிரத்னத்தின் பெயர்கள்கூட தமிழில் மட்டுமே இருந்தன. மணி ரத்னத்துக்குத் தமிழ்ப் பற்று இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.

கொய்ங் கொய்ங்!

’நீயா நானா’வுக்கு...

விஸ்வரூபம் பார்த்தாவது ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளை எப்படி ம்யூட் செய்வது என்று கற்றுக்கொள். கொய்ங் கொய்ங் என்று சத்தமெழுப்பி உயிரை எடுக்காதே!

100

நூறாவது டெஸ்ட் ஆடவிருந்த நிலையில், அணியில் இருப்போமா இல்லையோ என்கிற குழப்பத்தில் இருந்த ஒரே வீரர் ஹர்பஜனாக மட்டும் இருக்கும்.

இந்தியர்களில் கவாஸ்கர், வெங்சர்கார், கபில், டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லஷ்மண், கும்பிளே, ஷேவாக் ஆகிய வீரர்களுக்குப் பிறகு 100வது டெஸ்ட் ஆடுபவர், ஹர்பஜன். வாழ்த்துகள் பஜ்ஜி.


இவர் இப்படி என்றால் 99வது டெஸ்டில் செஞ்சுரி அடித்துவிட்டு, 100வது டெஸ்டை ஆடாமல் போன துரதிர்ஷ்டசாலி அசாருதீன். 

Thursday, February 14, 2013

மறக்கமுடியாத கரவொலி

நான் பார்த்தவரையில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பில், பாடல்களும் கைத்தட்டல்களும் போலித்தனமில்லாமல் இருக்கும்.

மறக்கமுடியாத கரவொலி - பருவமே பாடலில் வருகிற foot steps சப்தம். check 3.15-3.21.

http://www.youtube.com/watch?v=dXUdwRX29gI

ஓணமும் பொங்கலும்

சென்னையிலுள்ள பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் ஓணம் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார்கள். பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு தினங்களையும் இதுபோல கொண்டாடுகிறார்களா?

தண்ணி!

தமிழ்நாட்டுக்கு எந்த அண்டை மாநிலத்துடன் நல்ல உறவு இருக்கிறது? 

புதுச்சேரி. 

காரணம்? 

அதே தண்ணிதான்.

திருட்டுப் புத்தி

அதெப்படி, தொலைந்துபோன செல்போனைக் கண்டெடுப்பவர்களுக்கு உடனே திருட்டுப் புத்தி வந்துவிடுகிறது?

உன்னி கிருஷ்ணன் குரலும் ஹரிஹரன் குரலும் ஒன்றா?

சமீபத்தில், கே டிவியில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்தேன்.

இந்தப் படத்தின் கதை என்ன? சந்திக்காத, அறிமுகம் இல்லாத ஓர் ஆணின் குரலை விரும்புகிறாள் ஒரு பெண். பார்வை பறிபோன பின்பும், குரல் வழியாகவே அந்த ஆணை அடையாளம் காண்கிறாள்.

ஆனால், படத்தில் நடப்பது என்ன?

எங்கேயோ இருந்து ’இன்னிசை பாடி வரும்’ பாடலை விஜய் பாடுவார். உன்னிகிருஷ்ணன் குரல். சிம்ரனும் அந்தக் குரலை விரும்ப ஆரம்பிப்பார். ரைட்டு.

சிம்ரனின் கவிதை ஆனந்தவிகடனில் வெளியாகும். சிம்ரன் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் இருப்பார். விஜய் இந்தப் பக்கம். கவிதை வெளியானதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக ’மேகமாய் வந்து போகிறேன்’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்? எஸ்.பி.பி. போல பாடியிருக்கும் ராஜேஷ் என்கிற புதிய பாடகரின் குரலில். அந்தப் பக்க காம்பவுண்டிலிருந்து இந்தப் பாடலை கேட்கும் சிம்ரன், இது உன்னி கிருஷ்ணன் குரலல்ல. ராஜேஷ் குரல் என்றுதானே நினைத்திருக்கவேண்டும்! ஆனால், அவரோ, தமக்கு மிகவும் பரிச்சயமான குரல், அதாவது உன்னி கிருஷ்ணன் குரலென்று சந்தோஷமாகி அவரும் அழகாக ஸ்டெப்கள் வைத்து ஆடுவார். என்னய்யா நியாயமிது?

சரி போகட்டும். விஜய்யால் சிம்ரனின் பார்வை பறிபோய்விடும். ஒரு திருமண விழாவில், ’இருபது கோடி’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்? சிம்ரன் கேட்டுப் பழகிய உன்னி கிருஷ்ணன் குரலிலோ, ராஜேஷ் குரலிலோ அல்ல. புதிதாக ஒருவர், அதாவது ஹரிஹரன் குரலில்! (இதற்கு முன்பு, கோபால் என்றொரு பாடகரின் குரலில் ’பளபளக்குது புது நோட்டு’ என்றொரு பாடலையும் விஜய் பாடுவார். அந்தப் பாடலை சிம்ரன் கேட்காததால் லூஸில் விட்டு விடுவோம்.) ஹரிஹரன் குரலில் ’இருபது கோடி’ பாட்டைக் கேட்கும் பார்வையற்றவரான சிம்ரன், உடனே இது விஜய்தானே பாடுவது என்பதுபோல அக்கம்பக்கத்தில் விசாரிப்பார். அதெப்படி உன்னி கிருஷ்ணன் குரலும் ஹரிஹரன் குரலும் ஒன்றாகும்? சிம்ரன் மேடம், பார்வை மட்டும்தானே போச்சு?

கடைசியில் சிம்ரனுக்குப் பார்வை சரியாகிவிடும். கலெக்டர் ஆகிவிடுவார். கிளைமாக்ஸிலும், விஜய்க்கு தம் குரல் மூலமாகவே அறிமுகப்படுத்திகொள்ளவேண்டிய நெருக்கடி. நல்லவேளை, அப்போது பார்த்து ’இன்னிசை பாடி வரூம்....’ என்று உதித் நாராயணன் பாடவில்லை. முதலில் பாடிய உன்னி கிருஷ்ணனே இந்தப் பாடலையும் பாடுவார். சுபம்.

குரல் வழியாகவே ஹீரோ மீது ஹீரோயின் காதல் கொள்கிறார் என்கிற ஒரு கதையில்தான் இத்தனை ஓட்டை உடைசல்கள்! பாடல், சண்டைக்காட்சிகளில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதற்காக இத்தனை எல்லை மீறல்களா?

மாயவரத்துப் பிரபலங்கள்

பத்திரிகைகளில், யாராவது ஒரு பிரபலம், ’என் சொந்த ஊர் மயிலாடுதுறை (அல்லது மாயவரம், இரண்டும் ஒன்றும்தான்)’ என்று சொல்வதை அடிக்கடி பார்க்கிறேன். வாரம், நான்கைந்து முறையாவது மயிலாடுதுறை பற்றிக் கேட்கவோ படிக்கவோ நேர்கிறது. நான் ஒருமுறை மயிலாடுதுறைக்குச் சென்றிருக்கிறேன். அமைதியான, சிறிய ஊர். எப்படி இந்த ஊரிலிருந்து மட்டும் இத்தனை பிரபலங்கள் முளைக்கிறார்கள்?

கவி

பாரதியின் பிறந்த நாளன்று, கவிக்கு (வயது 2) 'ஓடிவிளையாடு பாப்பா’ பாடலை அறிமுகப்படுத்தினேன். 'ஓய்ந்திருக்கலாகாது’ என்கிற வார்த்தையெல்லாம் அழகாகத் தடம்புரண்டாலும், பாப்பா...என்று ஒவ்வொரு வரியும் முடிவது கவிக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷமாகச் சொல்லிப் பழகினாள். அடுத்த டிசம்பர் 11க்குள், கவி, குறைந்தது 10 பாரதி பாடல்களையாவது பாடப்பழகவேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.

ஜிமெயில் பூட்டு

உங்கள் gmail-க்கு வலுவான பூட்டு போடவேண்டுமா?

உங்கள் gmail அக்கவுண்டும் gtalk அக்கவுண்டும் தனித்தனி ID என்றால் இந்த நடைமுறையைப் பின்பற்றவும். (ஒரே ஐடி தான் என்றால் வேண்டாம். பிறகு, gtalk-க்கின் பாஸ்வேர்ட் உங்கள் வசம் இருக்காது. அது கொடுக்கும் பாஸ்வேர்டைத்தான் நாம் பயன்படுத்த நேரிடும்.)

https://www.google.com/settings/security

இந்த லிங்கில் உள்ள 2-step verification-ஐ enable செய்யவும்.

இதன்படி, நீங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டரிலிருந்து (அல்லது கம்ப்யூட்டர்களிலிருந்து) gmail-ஐ இயக்கினால் பிரச்னை இல்லை. ஆனால், வேறு ஏதாவது கம்ப்யூட்டரிலிருந்து உங்கள் gmail லாகின் செய்யப்பட்டால் உடனே அது உள்ளே சென்றுவிட்டாது. லாகின் ஐடி, பாஸ்வேர்ட் சரியாக இருந்தாலுமே, வெரிவிகேஷன் கோட் நம்பரைக் கேட்கும். (அது நேராக உங்கள் தொலைப்பேசிக்கு வந்துவிடும்.) கோட் நம்பர் கொடுத்தால் மட்டுமே gmail உள்ளே செல்லமுடியும்.

இதனால், உங்கள் மெயிலை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்கிற பயமே இல்லாமல் இருக்கலாம். (போன் தொலைந்து போனாலோ, நம்பர் மாறினாலோ அதை ஜிமெயில் செட்டிங்க்ஸில் மாற்றிக்கொள்ளலாம்.)

ஜேபி!

சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்குக்கு வெளியே நடந்த ஒரு கூட்டத்தில், அருமையான பேச்சொன்றைக் கேட்டேன். ஜேபி என்கிற கல்வியாலோசகர். முதலில் 100 பேராக இருந்த கூட்டத்தை, பேச்சுத் திறமையால் 500+ ஆக்கிவிட்டார்.

+1,+2 படிக்கும் மாணவர்கள் அனைவரும், ஒருமுறை ஜேபியிடம் ஆலோசனை கேட்பது நல்லது. கல்வி, வேலைவாய்ப்பு விவரங்கள் விரல் நுனியில்.

மிக அருமையாகத் தமிழ் பேசியவரின் தாய்மொழி, குஜராத்தி. அத்தனை பேரையும் கட்டிப்போடும் குரல் வளம்.

தான், தமிழ்நாட்டில் மிகவும் ஃபேமஸ் என்பதுபோலப் பேசினார். அவர் எங்கு சென்றாலும் நீங்க ஜேபிசார்தானே என்று அடையாளம் கண்டு பேசுகிறார்களாம். ஆனால், நான் அவரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை.

இமெயில் ஐடி, தொலைப்பேசி எண் எல்லாம் தருகிறேன் என்றார், மாணவர்களிடம். அவர் அறிவிப்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன்.

ஜேபியை இங்கே பிடிக்கலாம்.

https://www.facebook.com/jpgandhi

http://www.askjpgandhi.com/jpgandhi.html

டாப் 10-ல் ராஜராஜ சோழன்

கடந்த மூன்று வருடங்களாக, கிழக்கு டாப் 10-ல் ராஜராஜ சோழன் இடம் பிடித்துவருகிறது.

சென்னை புத்தகக் காட்சி 2013 - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்

http://www.badriseshadri.in/2013/01/blog-post_23.html


ராஜராஜ சோழன் நூலை வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html 

அவள் பிரிவு

சாமிநாத சர்மா தன் மனைவியைப் பற்றி எழுதிய கடிதங்களின் தொகுப்பு, அவள் பிரிவு என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியின் வெளியே உள்ள பிளாட்பாரக் கடையொன்றில் வாங்கினேன். பத்து ரூபாய். சாமிநாத சர்மா, நாடுகள், தலைவர்களைப் பற்றியெல்லாம் விரிவாக நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். இந்நூல் அவருடைய மனைவியைப் பற்றியது. அவருடைய சுயசரிதத்தின் ஒருபாகமாக இருக்கும் என்றெண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், இது வேறொரு திசைக்குக் கூட்டிச் சென்றுவிட்டது. பல இடங்களில் துக்கத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி சாமிநாத சர்மாவின் மனைவிமீது பெரிய அளவில் மரியாதையை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காலப் பெண்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று, அவள் பிரிவு.

புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், என் வாழ்வில் மறக்கவேமுடியாத ஒரு புத்தகத்தை வெறும் பத்து ரூபாய்க்கா நான் வாங்கியிருக்கவேண்டும் என்று மனசு உறுத்தியது.

இந்நூல் தொடர்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு.

http://www.sramakrishnan.com/?p=3232

எப்படி மனசு வந்தது ரஹ்மான்?

’அடியே...’ எங்கே நீ கூட்டிப்போற (கடல்)’ பாடலை Sid Sriram-க்குக் கொடுக்க ரஹ்மானுக்கு எப்படி மனசு வந்தது? மணிரத்னம், Sid Sriram வெர்ஷனை மறுத்தபிறகும்!? 

அடியே.. ரஹ்மானுக்கு லட்டு மாதிரியான பாடலல்லவா!

சித் ஸ்ரீராம் பேட்டி: http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-a-r-rahman-on-kadal/20130124.htm#1

’அடியே...’ பாடல்: https://www.youtube.com/watch?v=pAltddaLLf0

Mani Ratnam - Ilayaraja - Rahman - Factu!

Factu.

Mani Ratnam with Ilayaraja (in tamil): 8 films. 6 hits. 2 flops.
Mani Ratnam with Rahman: 11 films, 3 hits, 8 flops (incl kadal).

மணி ரத்னத்தின் தமிழ்ப் பற்று

கடல் படத்தில் ஆச்சரியமளித்த ஒரு விஷயம் - படத்தின் டைட்டில் கார்ட்.

Gemini Films circuit, Madras Talkies, A Mani Ratnam film போன்ற தயாரிப்பு விவரங்களைத் தவிர வேறு எதிலுமே ஆங்கிலம் இல்லை. படத்தின் டைட்டில், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஆகிய அனைத்தும் தமிழில் மட்டுமே இருந்தன. சமீபகாலமாக, முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போன்றவை ஆங்கிலத்திலும் இருக்கும்படிதான் டைட்டில் கார்டை வடிவமைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை.

இங்கு அப்படியெல்லாம் தரம் பிரிக்கவில்லை. எங்கும் எதிலும் தமிழ். ரஹ்மான், மணிரத்னத்தின் பெயர்கள்கூட தமிழில் மட்டுமே இருந்தன. மணி ரத்னத்துக்குத் தமிழ்ப் பற்று இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.

ஃபேஸ்புக்கில் இதற்கான சில பதில்கள்:

Sudharsan Venkat: மணி ரத்னம் படத்தின் பாடல்களில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கிடையாது.

Mahesh Subramanian: முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை Anbe Aaryuiyre - SJ Surya Movie